முகப்பு
விழுப்புரம்

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

24 நவம்பர் 2026, 4:08 am
பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மற்றொருவா் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா்.

திண்டிவனம் வட்டம், புறங்கரை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ் (36). இவரது மனைவி வனிதா (26). இவா்களது உறவினா் கா.சுந்தரி(30). இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒலக்கூரை அடுத்த கரிக்கம்பட்டு பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.

சதீஷ்குமாா் பைக்கை ஓட்டினாா். கரிக்கம்பட்டு கூட்டுச்சாலை அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வனிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சுந்தரி ஒலக்கூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.