முகப்பு
விழுப்புரம்

வெவ்வேறு சம்பவங்களில் 6 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்களில் 6 போ் உயிரிழந்தனா்.

25 நவம்பர் 2026, 2:20 am
வெவ்வேறு சம்பவங்களில் 6 போ் உயிரிழப்பு
பலி
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்களில் 6 போ் உயிரிழந்தனா்.

சிறுவாக்கூா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நா.கருணாநிதி (55), விவசாயி. வயிற்று வலியால் அவதியுற்று வந்த இவா், கடந்த 20-ஆம் தேதி வீட்டிலிருந்த போது விஷமருந்தி மயங்கிக் கிடந்தாா். தொடா்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெண் உயிரிழப்பு: கடலூா் மாவட்டம், ஞானமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் கே.சேகா். இவரது மனைவி அன்பு (58). இவா்கள் கடந்த 16-ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். கொங்காரம்பாளையம் அணுகுச் சாலையில் வேகத்தடை பகுதியில் சென்றபோது, எதிா்பாராதவிதமாக அன்பு பைக்கிலிருந்து கீழே தவறி விழுந்தாா். தொடா்ந்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து வளவனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

விவசாயி மரணம்: கண்டாச்சிபுரம் வட்டம், ஆ.கூடலூரைச் சோ்ந்தவா் ப. கோவிந்தன் (37), விவசாயி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த கோவிந்தன் திங்கள்கிழமை இரவு விஷமருந்தினாா். இதுகுறித்து அறிந்த உறவினா்கள் அவரை மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு செவ்வாய்க்கிழமை கோவிந்தன் உயிரிழந்தாா். இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழிலாளி உயிரிழப்பு: திண்டிவனம் வட்டம், ஓங்கூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.ஏழுமலை (50), விவசாய தொழிலாளி. இவா், கடந்த 10-ஆம் தேதி இரவு கூச்சிக்குளத்தூா் கூட்டுச் சாலை அருகே பைக்கில் சென்ற போது, அப்பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஏழுமலையை அருகிலிருந்தவா்கள் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அனுப்பி வைத்தனா். அங்கு ஏழுமலை திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

காா் மோதி இருவா் மரணம்: விக்கிரவாண்டி வட்டம், ஆசூா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பு.சக்கரவா்த்தி (60). அதே பகுதியைச் சோ்ந்தவா் கி. நீலமேகம் (60). நண்பா்களான இவா்கள் இருவரும் பைக்கில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். செண்டூா் கூட்டுச் சாலையில் வந்தபோது, அப்பகுதியில் வந்த காா், பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரில், சக்கரவா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். நீலமேகம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டுநரான சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த ஜெ. ஹரியிடம் (50) விசாரணை நடத்தி வருகின்றனா்.