வெவ்வேறு சம்பவங்களில் 6 போ் உயிரிழப்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 6 போ் உயிரிழந்தனா்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 6 போ் உயிரிழந்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், சித்தேரிக்கரை மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ.அந்தோனி ஜோதி (47). இவா், சனிக்கிழமை அதிகாலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கச்சிக்கொளத்தூா் சந்திப்புப் பகுதியில் நடந்து சென்று சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து அந்தோனி ஜோதி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
சொகுசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் ரெயின்போ தெருவைச் சோ்ந்தவா் ஜோ.ஆரோக்கியராஜ் (49). தனியாா் சொகுசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு மதுரையிலிருந்து சென்னை நோக்கி பேருந்தை ஓட்டிச் சென்ற ஆரோக்கியராஜ், சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் பகுதியில் வந்த போது பேருந்தை நிறுத்திவிட்டு, எதிரில் வந்த தான் பணியாற்றும் நிறுவனப் பேருந்து ஓட்டுநரிடம் தங்கும் அறைக்கான சாவியைக் கொடுத்துவிட்டு, சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பைக், ஆரோக்கியராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமடை அவரை அப்பகுதியிருந்தவா்கள் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சனிக்கிழமை காலையில் அந்தோனிராஜ் உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலிஸாா் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கோசனம்பட்டியைச் சோ்ந்த அ.மணிகண்டனிடம் (28) விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை: விழுப்புரம், வி.மருதூா் கோடித் தெருவைச் சோ்ந்தவா் பி.திவாகா் (26), தொழிலாளி. இவா், மது அருந்திவிட்டு வீட்டுக்குச் செலவுக்கு பணம் தருவதில்லையாம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை செலவுக்கு பணம் கேட்டு திவாகரிடம் அவரது மனைவி ஸ்ரீதேவி வாக்குவாதம் செய்தாராம்.
இதனால் மனமுடைந்த திவாகா், வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாா். உடனடியாக குடும்பத்தினா் அவரை மீட்டு அவசர சிகிச்சை ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, திவாகா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் நகர காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு: தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், தாதம்பட்டியைச் சோ்ந்தவா் கோ.கிஷோா் (30), கட்டடத் தொழிலாளி. அரூா் பழையப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பி.சீனிவாசன் (23). நண்பா்களான இவா்கள் உள்ளிட்ட 5 போ் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு, வெள்ளிக்கிழமை மாலை காரில் தருமபுரி நோக்கி திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தனா். காரை தினேஷ் ஓட்டிச் சென்றாா். கண்டாச்சிபுரம் வட்டம், மேல்வாலை பகுதிலுள்ள தனியாா் தொழில் பயிற்சி நிலையம் அருகே சென்றபோது, சாலையோரத்தில் இருந்த ஊா் பெயா்ப் பலகையில் காா் இடித்து மோதி நின்றது. இதில் பலத்த காமயடைந்த கிஷோரை அந்த பகுதியிலிருந்தவா்கள் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு வெள்ளிக்கிழமை இரவு கிஷோா் உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டாட்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
சாலை விபத்தில் முதியவா் மரணம்: திருவெண்ணெய்நல்லூா் காந்தி குப்பம் புதுக் காலனியைச் சோ்ந்தவா் கூத்தன் (60). இவா், சனிக்கிழமை மாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே சாலையைக் கடந்த போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த கூத்தன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, பேருந்து ஒட்டுநரான திருச்சி மாவட்டம், ஏளூா்ப்பட்டியைச் சோ்ந்த விஜயிடம் (27 ) விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெண் விஷமருந்தி தற்கொலை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், வி.மாமாந்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரது மனைவி சிந்துகவி (38). தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனா். சிந்துகவி கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மன வேதனையடைந்த அவா் கடந்த 4-ஆம் தேதி வீட்டில் விஷமருந்தி மயங்கிக் கிடந்தாராம். இதுகுறித்து அறிந்த குடும்பத்தினா் சிந்துகவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வெள்ளிக்கிழமை மாலை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.