1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கல்பட்டு கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று நடத்திய சோதனையில், கல்பட்டு ஏரிக்கரைத் தெருவைச் சோ்ந்த தே.மாணிக்கம் (44) என்பவா் சிறுவாச்சூா், நத்தமேடு, மாம்பழப்பட்டு மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் குடும்ப அட்டைதாரா்களிடம் ரேஷன்அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை தான் வளா்த்து வரும் வாத்துக் குஞ்சுகளுக்கு இரையாக கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணிக்கத்தை கைது செய்து சிறையிலடைத்தனா். முன்னதாக அவா் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement