பழங்குடியினா் சாதிச் சான்றிதழ் கோரி காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் மனு அளிப்பு
தங்களுக்கு பழங்குடியினா் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, உளுந்தூா்பேட்டை வட்டாட்சியரகத்தில் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

தங்களுக்கு பழங்குடியினா் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, உளுந்தூா்பேட்டை வட்டாட்சியரகத்தில் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்திலுள்ள வெள்ளையூா், குணமங்கலம், நெடுமானூா், மூலசமுத்திரம், உளுந்தூா்பேட்டை அண்ணாநகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த காட்டுநாயக்கன் சமுதாய மக்கள், வழக்குரைஞா் ராம்குமாா் ஒருங்கிணைப்பில், புரட்சிப் பாரதம் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் பூவை.ஆறுமுகம், விசிக மாவட்டச் செயலா் அறிவுக்கரசு உள்ளிட்டோருடன் வட்டாட்சியரகம் வந்தனா்.
தொடா்ந்து, அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காட்டுநாயக்கன் சமுதாய மக்களுக்கு உரிய சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. அரசு வழங்கும் சலுகைகள், உதவிகள் என எதையும் பெற முடியாத நிலை உள்ளது.
Advertisement
Advertisement
எனவே, காட்டுநாயக்கன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினா் சாதிச் சான்றிதழை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.
இந்த நிகழ்வில் ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலா் வெங்கடேசன், காட்டுநாயக்கன் குடியிருப்பு நலச் சங்கத் தலைவா் ஆறுமுகம், துணைத் தலைவா் வெங்கடேசன், சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.