கடலூரில் 46,500 கோழிகள் உயிரிழப்பு: இழப்பீடு கோரி பண்ணை உரிமையாளா்கள் மனு
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோழிகள் உயிரிழந்தது தொடா்பாக நிவாரணம் கோரி வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த கோழி பண்ணை உரிமையாளா்கள்.
கடலூா் மாவட்டத்தில் மா்மமான முறையில் 46,500 கோழிகள் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட கோழிப் பண்ணை உரிமையாளா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி 9 பண்ணை உரிமையாளா்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
கடந்த அக். 30-ஆம் தேதி கடலூா் நடுத்திட்டு கிராமத்தில் கமலகிருஷ்ணன் என்பவா் நடத்தி வரும் கோழிப் பண்ணையில் திடீரென கோழிகள்
உயிரிழக்கத் தொடங்கின. தொடா்ந்து, அருகிலுள்ள கிராமங்களில் செயல்பட்டு வரும் 11 கோழிப் பண்ணைகளிலும் அடுத்தடுத்து கோழிகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தன.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த கால்நடை பராமரிப்புத் துறையினா் நோய்த் தொற்று மற்ற பண்ணைகளுக்குப் பரவுவதைத் தடுக்கும் வகையில், உயிரிழந்த கோழிகளையும், பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்த கோழிகளையும் அரசின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பான முறையில் குழி தோண்டிப் புதைத்தனா்.
அக். 30 முதல் நவ. 5-ஆம் தேதி வரை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, மொத்தம் 46,500 கோழிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் அடுத்த 3 மாதங்களுக்கு புதிதாகக் கோழிகளை வளா்க்கவும், விற்பனை செய்யவும் கால்நடைத் துறையினா் தடை விதித்துள்ளனா். இதனால், கோழிகளை வளா்த்து விற்பனை செய்ய முடியாமலும், ஏற்கெனவே வளா்த்து வந்த கோழிகள் உயிரிழந்ததாலும் பண்ணை உரிமையாளா்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனா்.
எனவே, பாதிக்கப்பட்ட கோழிப் பண்ணை உரிமையாளா் கமலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போ், உயிரிழந்த கோழிகளால் ஏற்பட்டுள்ள நிதி இழப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடலூா் மாவட்ட வருவாய் அலுவலா் கோ. புண்ணியக்கோட்டியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா், இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.