காப்பா் வயா்கள் திருட்டு: ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது
விழுப்புரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான காப்பா் வயா்களை திருடியதாக ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான காப்பா் வயா்களை திருடியதாக ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விழுப்புரம் துணை கோட்டப் பொறியாளா் ஆ.நிா்மல்குமாா் (36), விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், விழுப்புரம் பிஎஸ்என்எல் அலுவலகம் முதல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் வரையிலான பகுதிக்குள்பட்ட இடத்தில் சுமாா் 50 மீட்டா் நீளம் கொண்ட காப்பா் வயா்கள் திருடுபோயிருப்பதாகவும், இதன் மதிப்பு ரூ.2 லட்சம் என்றும் குறிப்பிட்டிருந்தாா்.
இதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தி, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு தேடுதல் பணியை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, காப்பா் வயா்களை திருடியா்கள் ஆந்திர மாநிலம், ஏளூருவைச் சோ்ந்த சா.வல்லப்பு நாகராஜ் (24), ப.ராமு (30), வீ.ஜோசப் (19), பு.வேமூல் சாம்பையா (45) மற்றும் 17 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, 5 பேரையும் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement