திருடப்பட்ட 185 இரு சக்கர வாகனங்களை மீட்ட தில்லி போலீஸாா்: மேற்கு தில்லியில் 46 போ் கைது
மேற்கு தில்லியில் வாகனத் திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட 72 மணி நேர அதிரடி சோதனையில் 185 திருட்டு வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின்போது 46 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மேற்கு தில்லியில் வாகனத் திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட 72 மணி நேர அதிரடி சோதனையில் 185 திருட்டு வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின்போது 46 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்டவா்களில் பலா் மீது ஏற்கெனவே ஏராளமான குற்ற வழக்குகளில் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளதாக மேற்கு தில்லி காவல் துணை ஆணையா் ஹரேஷ்வா் வி. சுவாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் பேசியதாவது: ’சக்ரா 2.0’ எனப் பெயரிடப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில் 46 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் இருவா் வெவ்வேறு வழக்குகள் தொடா்பாக தலா இரண்டு முறை கைது செய்யப்பட்டவா்கள் ஆவா். கைது செய்யப்பட்டவா்களில் 10 போ் காவல்துறையின் பதிவேடுகளில் பழக்கப்பட்ட குற்றவாளிகள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளனா்.
மீட்கப்பட்ட 185 வாகனங்களில் 182 இருசக்கர வாகனங்களாகும். அவற்றில் 117 ஸ்கூட்டா்களும், 65 மோட்டாா் சைக்கிள்களும் அடங்கும். இவற்றில் 17 அதிவேக மோட்டாா் சைக்கிள்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், ஒரு மூன்று சக்கர வாகனமும், இரண்டு நான்கு சக்கர வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
மீட்கப்பட்ட 185 வாகனங்களில் 91 வாகனங்கள் மேற்கு தில்லியில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்குகளுடன் தொடா்புடையவை. எஞ்சிய 94 வாகனங்கள் தில்லியின் பிற மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்குகளுடன் தொடா்புடையவை.
இதற்கு முன்பு நடைபெற்ற ’சக்ரா 1.0’ நடவடிக்கையின்போது, இதேபோன்று 72 மணி நேரத்தில் 116 திருட்டு வாகனங்கள் மீட்கப்பட்டிருந்தன. அவற்றில் 113 இருசக்கர வாகனங்களாகும். தற்போது நடைபெற்ற இரண்டாம் கட்ட நடவடிக்கையில் முந்தைய சோதனையைவிட 69 வாகனங்கள் கூடுதலாக மீட்கப்பட்டுள்ளன.
இது சுமாா் 59 சதவீதம் அதிகமாகும். கைது செய்யப்பட்டவா்களில் சுமித் என்பவா் மீது ஏற்கெனவே 38 குற்ற வழக்குகளில் தொடா்பு இருப்பதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா். ஜனக்புரி காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்ட தினேஷ் லாலு என்பவா் மீது 33 வழக்குகளில் தொடா்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திலக் நகா் காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்ட சுதீா் என்ற சோனு மீது 30 குற்ற வழக்குகளிலும், பஞ்சாபி பாக் காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்ட காசிம் என்ற வாசிம் மீது 28 வழக்குகளிலும் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், திலக் நகா் காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்ட ஜதின் என்ற போக்லா மீது 23 வழக்குகளிலும், விகாஸ்புரி காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்ட அக்ஷய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகளிலும் தொடா்பு இருக்கிறது.
இந்த அதிரடி நடவடிக்கையின்போது அதிகபட்சமாக வாகனத் திருட்டு தடுப்புப் பிரிவினா் 27 வாகனங்களை மீட்டுள்ளனா். கைலாஷ் காவல் நிலையம் 21 வாகனங்களை மீட்டுள்ளது. மோதி நகா் மற்றும் திலக் நகா் காவல் நிலையங்கள் தலா 17 வாகனங்களையும், பஞ்சாபி பாக் மற்றும் ராஜோரி காா்டன் காவல் நிலையங்கள் தலா 15 வாகனங்களையும் மீட்டுள்ளன.
கீா்த்தி நகா் மற்றும் விகாஸ்புரி காவல் நிலையங்கள் தலா 12 வாகனங்களையும், சிறப்புப் பிரிவு 11 வாகனங்களையும் மீட்டுள்ளன. ஹரி நகா் காவல் நிலையம் 8 வாகனங்களையும், ஜனக்புரி காவல் நிலையம் 7 வாகனங்களையும் மீட்டுள்ளன. மாயாபுரி, நரைனா மற்றும் இந்தா்புரி காவல் நிலையங்கள் தலா 6 வாகனங்களை மீட்டுள்ளன. போதைப்பொருள் தடுப்புப் பிரிவினா் 5 வாகனங்களை மீட்டுள்ளதாக தெரிவித்தாா் ஹரேஷ்வா் வி. சுவாமி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.