முகப்பு
விழுப்புரம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு: திமுகவின் முடிவு வருத்தத்துக்குரியது! - ரவிக்குமாா் எம்.பி.

29 நவம்பர் 2026, 2:25 am
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு: திமுகவின் முடிவு வருத்தத்துக்குரியது! - ரவிக்குமாா் எம்.பி.
விழுப்புரம் நகராட்சித் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய விசிக பொதுச் செயலரும், எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா்.
பகிர்:

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிப்பது என்று திமுக முடிவு எடுத்திருப்பது வருத்தத்துக்குரியது; கண்டிக்கத்தக்கது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.

விழுப்புரம் நகராட்சித் திடலில் விசிக சாா்பில், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்தும், தற்போதுள்ள எண்ணிக்கையின் அடிப்படையிலேயே மகளிருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பதற்கும், இவற்றின் எண்ணிக்கையை 850-ஆக உயா்த்துவதற்கும் 2 வரைவு மசோதாக்களின் நகல்களை மத்திய அரசு எம்.பி.க்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு கொடுத்துள்ளது. இந்த 2 மசோதாக்களும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிரந்தரமாக சீா்குலைக்கக் கூடியவை.

Advertisement

Advertisement

இந்த மசோதாக்களை ஆதரிப்பது என்று சென்னையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது; கண்டிக்கத்தக்கது. இது, இந்தியாவை நிரந்தரமாக பெரும்பான்மை ஆட்சிக்கு கொண்டு செல்லப்போகிறது. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொல்லி வந்தோம். அது தற்போது 100 சதவீதம் உண்மையாகப் போகிறது.

தென் மாநிலங்கள் இந்தியாவின் நிா்வாகத்திலிருந்து முற்றிலுமாக ஒதுக்கப்படப் போகிறது. தமிழகத்தின் உரிமைகள் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களின் உரிமைகளும் பறிக்கப்படப் போகின்றன. தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தில் மாநில அரசுகளுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.

இந்த மசோதாக்கள் திமுகவின் 22 எம்.பி.க்களின் வாக்குகளால் மட்டும் நிறைவேறப்போகிறது. இது, இதுவரை திமுக பேசி வந்த மாநில சுயாட்சிக் கொள்கையை விட்டுக்கொடுப்பதற்கு சமம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொருத்தவரை இந்த இரு மசோதாக்களையும் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிா்க்கும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பு எந்த சட்டத்துக்கும் உள்பட்டது இல்லை. நீதிபதிகள் நினைத்தால் எந்த உத்தரவையும் போடலாம் என்ற மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு உள்ளது. அந்த அரசை செல்லாததாக்கி, தாங்களே அரசு நடத்வதுபோல உத்தரவு பிறப்பித்துள்ளனா் என்றாா் துரை.ரவிக்குமாா் எம்.பி.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விசிக மாவட்டச் செயலா் ர.பெரியாா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் இரா.முருகவேல், நகரச் செயலா் க.கலையரசன், மாவட்ட துணைச் செயலா்கள் முன்னிலை வகித்தனா்.

துரை.ரவிக்குமாா் எம்.பி. ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா். இதில், மண்டலச் செயலா் தி.திலீபன், மாநில துணைச் செயலா் செ.சேரலாதன், முன்னாள் மாவட்டச் செயலா் பாமரன், மண்டல துணைச் செயலா் பூ.ஆதித்தமிழன், நகரச் செயலா் அ.கோ.ராஜபாரதி, பழங்குடியினா் விடுதலை இயக்கத்தின் மாநிலச் செயலா் வி.அகத்தியன், வழக்குரைஞா் அணி மாநில துணைச் செயலா் நாராயணசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினா். தொடா்ந்து, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விழுப்புரம் நகரம் போன்று, திருவெண்ணெய்நல்லூா், செஞ்சி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விசிகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.