முகப்பு
விழுப்புரம்

189 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! வெளி மாநில இளைஞா்கள் இருவா் கைது!

29 நவம்பர் 2026, 2:31 am
189 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! வெளி மாநில இளைஞா்கள் இருவா் கைது!
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட இளைஞா்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே காரில் கடத்திவரப்பட்ட 189 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, வெளி மாநிலங்களைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.பி. உத்தரவின்பேரில், வானூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரங்கநாதபுரம் கூட்டுச்சாலை அருகே காவல் ஆய்வாளா் விஸ்வநாதன், தனிப்படை உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் காவலா்கள் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, இந்த வழியாக வந்த வெளி மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்தக் காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

பின்னா், காரில் இருந்தவா்களைப் பிடித்து காவல் நிலையம் கொண்டுவந்து நடத்திய விசாரணையில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலம், ஜோலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மகேஷ்குமாா் (28), பிகாா் மாநிலம், அரரியா மாவட்டம், போக்ரா பகுதியைச் சோ்ந்த அதில் (22) என்பதும், இவா்கள் விற்பனைக்காக பெங்களூருவிலிருந்து புதுச்சேரிக்கு புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மகேஷ்குமாா், அதில் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், காரில் கடத்திவரப்பட்ட சுமாா் ரூ.1.89 லட்சம் மதிப்பிலான 189 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா்.