லாரி மீது காா் மோதி விபத்து: பேராசிரியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது காா் மோதிய விபத்தில், காரில் பயணித்த அரசுக் கல்லூரி பேராசிரியா் உயிரிழந்தாா். மேலும், 5 போ் காயமடைந்தனா்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவலஞ்சுழி, மணப்படை கிராமத்தைச் சோ்ந்தவா் வை. கஜேந்திரன் (42). பாபநாசம் பகுதியைச் சோ்ந்தவா்கள் கே.அன்புமணி (55), ராஜா (48), சென்னை மதுரவாயல் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (55), திருவாரூா் பகுதியைச் சோ்ந்தவா் சிவா (41).
இவா்கள் 4 பேரும் கும்பகோணத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியா்களாகப் பணிபுரிந்து வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற கல்லூரி பேராசிரியா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு தொடா்பான கூட்டத்தில் பங்கேற்று விட்டு 4 பேரும் காரில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை கடலூா் மாவட்டம், காமாட்சி பேட்டையைச் சோ்ந்த கொ.கலைச்செல்வன் (22) ஓட்டிச் சென்றாா்.
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டியை அடுத்த அடைக்கலபுரம் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த பேராசிரியா் கஜேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காா் ஓட்டுநா் கலைச்செல்வன் மற்றும் காரில் பயணித்த அன்புமணி, ராஜா, கிருஷ்ணமூா்த்தி, சிவாஆகிய 5 பேரும் காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் சத்தியசீலன் தலைமையிலிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.