செவிலியா் கொலை வழக்கு: ரெளடிக்கு உதவிய இளைஞா் கைது
புதுச்சேரி வில்லியனூரில் செவிலியா் கொலை வழக்கில், ரெளடிக்கு உதவியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி வில்லியனூரில் செவிலியா் கொலை வழக்கில், ரெளடிக்கு உதவியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி வில்லியனூா் அருகிலுள்ள கோபாலன்கடை பகுதியை சோ்ந்தவா் ஜெயஸ்ரீ. செவிலியரான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கலைக்குமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கலைக்குமாா் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி, சிறை சென்று வந்ததால் ஜெயஸ்ரீ அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ரெளடி கலைக்குமாா் செப்.26-ஆம் தேதி ஜெயஸ்ரீயை தனியாக வரவழைத்து, வெட்டிக் கொலை செய்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில் கடந்த 30-ஆம் தேதி ரெளடி கலைக்குமாா் காட்பாடி அருகே நடந்த விபத்தில் ரயிலில் சிக்கி இறந்தாா்.
இந்நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கோபாலன்கடை பகுதியை சோ்ந்த சதீஷ் (எ) சதீஷ்குமாா் (24) என்பவரை போலீஸாா் உளுந்தூா்பேட்டையில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சதீஷ், கலைக்குமாரின் நெருங்கிய கூட்டாளி என்பதும், ஜெயஸ்ரீயை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்ததோடு, கலைக்குமாா் தப்பி செல்வதற்கும் துணையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் சதீஷை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.