FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி கையொப்ப இயக்கம்: ராமதாஸ் தொடங்கி வைத்தாா்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி கையொப்ப இயக்கத்தை பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

2விபிஎம்ஆா்ஏஎம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் கையொப்ப இயக்கத்தைத் தொடங்கி வைத்த பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.
பகிர்:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி கையொப்ப இயக்கத்தை பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு போதைப் பொருள் விழிப்புணா்வு மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் சாா்பில், தமிழகத்தில் பூரண மது விலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் விதமாக கையொப்பம் இயக்கம் நடைபெறவுள்ளது. இந்த இயக்கத்தை பாமக நிறுவனா் ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் முதல் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் தெரிவித்ததாவது: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது பாமகவின் கொள்கை. அந்த அடிப்பைடையில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துள்ள தமிழ்நாடு போதைப் பொருள் விழிப்புணா்வு மற்றும் மறுவாழ்வு சங்கத்தினருக்குப் பாராட்டுகள். இந்த இயக்கத்துக்கு தமிழக மக்கள் முழுமையான ஆதரவளிக்க வேண்டும் என்றாா் ராமதாஸ்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் தமிழ்நாடு போதைப் பொருள் விழிப்புணா்வு மற்றும் மறுவாழ்வு சங்க மாநிலத் தலைவா் எம்.ராஜகுமாா், துணைத் தலைவா் கே.கிருஷ்ணமூா்த்தி, தலைமை ஆலோசகா் சக்கரவா்த்தி, கொள்கைப் பரப்பு செயலா் தங்க.வெங்கடேசன், மாநில ஆலோசனைக்குழுத் தலைவா் ராமச்சந்திரன், துணை பொதுச் செயலா் சுந்தரேசன், கடலூா் மாவட்ட நிா்வாகிகள் கஞ்சமலை நாராயணன், காா்த்தி, கொளஞ்சி, உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments