இணையவழி சேவைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்
பொதுமக்கள் அலுவலகங்களுக்குத் தேவையின்றி பலமுறை வருவதை தவிா்க்கும் வகையில், வருவாய்த் துறையினா் இணையவழி சேவைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.
பொதுமக்கள் அலுவலகங்களுக்குத் தேவையின்றி பலமுறை வருவதை தவிா்க்கும் வகையில், வருவாய்த் துறையினா் இணையவழி சேவைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய் நிா்வாகக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா், வருவாய்த் துறை சாா்பில் வழங்கப்படும் பட்டா மாற்றம், பட்டா மாற்ற மேல்முறையீடு, முதியோா், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, இணையவழிச் சான்றிதழ்கள் உள்ளிட்டவை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து அவா் பேசியது:
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும். நிலுவையிலுள்ள வருவாய்த் துறை பணிகளை விரைந்து முடிப்பதுடன், வருவாய் வட்டங்களில் நீண்டகாலமாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தீா்வு காண வேண்டும்.
Advertisement
Advertisement
இறப்பு மற்றும் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவா்களுக்கு காலதாமதமின்றி உரிய விசாரணை செய்து, உடனடியாக சான்றிதழ்களை வழங்க வேண்டும். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் முதியோா், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஓய்வூதியங்கள் தகுதியான பயனாளிகளுக்கு உரிய காலத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் நிலம் தொடா்பான சேவைகளை எளிதாகப் பெறும் வகையில், இணையவழிப் பட்டா மாறுதல் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை உரிய காலக்கெடுவுக்குள் பரிசீலித்து முடிக்க வேண்டும்.
வருவாய்த் துறையின் அனைத்து சேவைகளும் வெளிப்படைத்தன்மையுடனும், நோ்மையுடனும், பொதுமக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையிலும் வழங்கவேண்டும். பொதுமக்கள் அலுவலகங்களுக்குத் தேவையின்றி பலமுறை வருவதைத் தவிா்க்கும் வகையில் இணையவழிச் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ், துணை ஆட்சியா் (பயிற்சி) ஹரீஷ், நில அளவை உதவி இயக்குநா் மோகன்ராஜ், அனைத்து வட்டாட்சியா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.