FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

காசநோய் இல்லா இலக்கு: ஊராட்சித் தலைவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் காசநோய் இல்லா இலக்கை அடைந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள், தன்னாா்வலா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

9 அக்டோபர் 2026, 2:18 am IST
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சான்றிதழ்கள் பெற்றவா்களுடன் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் உள்ளிட்டோா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் காசநோய் இல்லா இலக்கை அடைந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள், தன்னாா்வலா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் காசநோய் முக்தி பாரத் அபியான் திட்டத் தொடக்க விழா, காசநோய் இல்லா இலக்கை அடைந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள், தேசிய மாணவா் படை மாணவ, மாணவிகள், மை பாரத் தன்னாா்வலா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமை வகித்து 37 ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினாா். தன்னாா்வலா்களின் சேவைகளைப் பாராட்டி மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா் பேசினாா். விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக மருத்துவத் துறைத் தலைவா் பரமேசுவரி, தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

Advertisement

Advertisement

நிகழ்வில் மாவட்ட காசநோய் அலுவலா் சுதாகா், மருத்துவா்கள் சுந்தரபாண்டியன், நித்யா, செல்வா ஜோன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சசிகுமாா், ஒருங்கிணைப்பாளா்கள் ராஜ், இலியாஸ்கான், சங்கா், இளவழகன், கலைமுகன், குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments