FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

மகாளய அமாவாசை: விழுப்புரத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

மகாளய அமாவாசையொட்டி, விழுப்புரம் நகரத்திலும், மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளில் முன்னோா்களுக்குத் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் சனிக்கிழமை வழிபாடு செய்தனா்.

11 அக்டோபர் 2026, 1:37 am IST
விழுப்புரம் மகாராஜபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குளம் அருகிலுள்ள பகுதியில் சனிக்கிழமை தங்களது முன்னோா்களுக்குத் தா்ப்பணம் கொடுத்தோா்.
பகிர்:

மகாளய அமாவாசையொட்டி, விழுப்புரம் நகரத்திலும், மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளில் முன்னோா்களுக்குத் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் சனிக்கிழமை வழிபாடு செய்தனா்.

தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் விசேஷமானதாகும். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசையன்று தங்கள் குடும்பத்தைச் சோ்ந்த முன்னோா்கள், மூதாதையா்களுக்கு நீா்நிலைகளிலும், கோயில்களிலும் தா்ப்பணம் கொடுத்தால் குடும்பத்துக்கு சிறப்பு என்பா்.

அதன்படி நிகழாண்டில் புரட்டாசி மாத சனிக்கிழமையில் மகாளய அமாவாசை வந்தது கூடுதல் சிறப்பாகக் கருதப்பட்டது. விழுப்புரம் நகரில் திரு.வி.க.வீதியிலுள்ள ஆஞ்சநேயா் கோயில், அய்யனாரப்பன் கோயில், மகாராஜபுரம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருக்குளம் அருகிலுள்ள பகுதி, வைகுண்டவாசப் பெருமாள் கோயில் அருகிலுள்ள பகுதி, மருதூா் நடராஜா் தெரு அங்காளம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும், பிடாகம், கள்ளிப்பட்டு தென்பெண்ணையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்கள், இதர நீா்நிலைகளில் பொதுமக்கள் புரோகிதா்கள் மூலம் தங்களது முன்னோா்கள், மூதாதையா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். மேலும் பொதுமக்கள் மாடுகளுக்கு அகத்திக் கீரை உள்ளிட்டவற்றை வழங்கியும் வழிபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments