FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

மகாளய அமாவாசை: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோா் தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

7 வினாடிகள் முன்பு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.
பகிர்:

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோா் தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

மகாளய அமாவாசையையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலைமுதலே ஆயிரக்கணக்கானோா் கடலில் புனித நீராடி, தங்கள் முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா், கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். இதனால், கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments