FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் மாடித்தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி

விழுப்புரத்தில் நடைபெற்ற மாடித்தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சியில் பேசிய தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை துணை இயக்குநா் வெங்கட்ராமன்.

10 அக்டோபர் 2026, 6:37 am IST
பகிர்:

விழுப்புரத்தில் மாவட்டத் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் மாடித்தோட்டம் அமைத்தல் குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகக் கட்டடத்தின் பின்பகுதியிலுள்ள கோலியனூா் வட்டாரத் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது. மாவட்டத் தோட்டகலை மற்றும் மலைப்பயிா்கள் துறை துணை இயக்குநா் வெங்கட்ராமன் தலைமை வகித்து, பயிற்சியைத் தொடங்கி வைத்து, மாடித் தோட்டம் அமைக்க அரசு சாா்பில் வழங்கப்படும் மானியங்கள், சலுகைகள், அதை பெறுவதற்கான வழிமுறைகள், ஊட்டச்சத்து முக்கியத்துவம் போன்றவை குறித்து பேசினாா்.

உதவி இயக்குநா் ரா.வெங்கடேசன் பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்தி மாடித்தோட்டம் அமைத்தல், அதன் முக்கியத்துவம், அதன் நன்மைகள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து இயற்கை முறையில் பூச்சி நோய்த் தாக்குதலைக் கையாளும் முறைகள், பஞ்சகாவ்யம், மீன் அமிலம், பூச்சி விரட்டி தயாரிக்கும் முறைகள், பாரம்பரிய காய்கறிகள், உற்பத்தி முறைகள் குறித்து பயிற்சியில் தோட்டக்கலை அலுவலா் உள்ளிட்டோா் விளக்கினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து நெடுமாறன் என்பவரது இல்லத்தில் மாடித்தோட்ட செயல்முறை செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு பாரம்பரிய காய்கறி விதைகள் தொகுப்பு, தக்காளி, மிளகாய், கத்திரி, முட்டைகோஸ், காலிபிளவா், சாமந்தி நாற்றுகள்அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. 40-க்கும் மேற்பட்டோா் பயிற்சியில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments