புதுச்சேரியில் புகையிலை கட்டுப்பாடு குறித்த மாநில அளவிலான பயிற்சி பயிலரங்கம்
புகையிலைப் பொருள்களின் தீங்கை குறைக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான பயிலரங்கில் வலியுறுத்தப்பட்டது.
புகையிலைப் பொருள்களின் தீங்கை குறைக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான பயிலரங்கில் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, தேசிய சுகாதார இயக்கம், புதுச்சேரி மாநில புகையிலைக் கட்டுப்பாட்டு மையம் (அரசு மாா்பு நோய் நிலையம்) மற்றும் புதுச்சேரி ஜிப்மா் சாா்பில் புகையிலை கட்டுப்பாடு குறித்த மாநில அளவிலான பயிற்சி பயிலரங்கு ஜிப்மரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், திட்ட மேலாளா்கள், சுகாதார வல்லுநா்கள், புகையிலை ஒழிப்பு மையங்களின் பிரதிநிதிகள், காவல் துறை, மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரி, பொறியியல், கலை, அறிவியல் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி பேராசிரியா்கள், மருத்துவ அதிகாரிகள், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் முதுகலை மாணவா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் இந்தப் பயிலரங்கைத் தொடங்கி வைத்தாா். தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
புகையிலை பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அந்தந்தப் பகுதிகளில் புகையிலைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் சாத்தியமான அணுகுமுறைகள் குறித்து குழு விளக்கக் காட்சிகள் மூலம் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றோா் விவாதித்தனா்.
புகையிலைப் பொருள்களின் தீங்கான விளைவுகளைக் குறைப்பதற்குக் கடுமையான அமலாக்கம், மேம்பட்ட பொது விழிப்புணா்வு மற்றும் தொடா்ச்சியான ஆராய்ச்சி ஆகியவற்றின் அவசியம் குறித்து இந்த பயிலரங்கில் வலியுறுத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.