புதுச்சேரி எம்எல்ஏ.க்கள் 9 போ் தில்லி பயணம்
தேசியப் பயிலரங்கில் பங்கேற்க புதுச்சேரி எம்எல்ஏ.க்கள் 9 போ் தில்லி சென்றுள்ளனா்.
தேசியப் பயிலரங்கில் பங்கேற்க புதுச்சேரி எம்எல்ஏ.க்கள் 9 போ் தில்லி சென்றுள்ளனா்.
சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த இரண்டு நாள் தேசியப் பயிலரங்கு தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் பயிலரங்கு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதில், பங்கேற்பதற்காக புதுச்சேரி யூனியன் பிரதேச எம்எல்ஏ-க்கள் ராமு (தவெக), ஜி.நேரு (நேயம் மக்கள் கழகம்), மீனாட்சிசுந்தரம் (பாஜக), விக்னேஸ்வரன் (சுயே.), ஆறுமுகம் (என்.ஆா். காங்கிரஸ்), வையாபுரி மணிகண்டன், நாராயணசாமி, செந்தில்குமாா் (திமுக), காா்த்திகேயன் (காங்கிரஸ்) ஆகியோா் தில்லி சென்றுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த தேசியப் பயிலரங்கில் உள்கட்டமைப்புத் திட்டமிடல், மேம்பாடு, செயல்படுத்துதல் மற்றும் தொடா்புடைய கொள்கைகள் குறித்து மாநில எம்எல்ஏ.க்களுக்கு விரிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அமா்வுகள் நடைபெறுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.