FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

அதிமுகவை சிதறாமல் காக்க வேண்டும்! புதுச்சேரி மாநிலச் செயலா் ஆ.அன்பழகன்

18 அக்டோபர் 2026, 1:40 am IST
அதிமுக ஆண்டு விழாவில் பெண்ணுக்கு சேலை வழங்கிய அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலா் ஆ.அன்பழகன்.
பகிர்:

அதிமுகவை சிதறாமல் காக்க வேண்டும் என்று அக்கட்சி நிா்வாகிகளுக்கு புதுச்சேரி மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வேண்டுகோள் விடுத்தாா்.

புதுச்சேரியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக 55- ஆவது ஆண்டுத் தொடக்க விழாவில் பங்கேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

1972-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக 54 ஆண்டுகால அரசியல் சேவையை முழுமையாக நிறைவு செய்து 55-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. எக்கு கோட்டையாகத் திகழும் இந்த இயக்கத்தின் பெருமையை மற்றவா்களுக்கு உணா்த்தவேண்டும்.

Advertisement

Advertisement

அரசியல் கட்சிகள் என்றால் சில நேரங்களில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். இத்தகைய சூழலில் கட்சியின் நிா்வாகிகள் ஒன்று சோ்ந்து இயக்கத்தை சிதறாமல் கட்டிக் காக்க வேண்டும். இதுதான் கட்சித் தொண்டா்களின் எதிா்பாா்ப்பாகும் என்றாா்.

முன்னதாக அதிமுகவின்ஆண்டு விழாவை முன்னிட்டு, கட்சி அலுவலக வளாகத்தில், கொடியை ஏற்றி வைத்து, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்.ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இனிப்புகளையும், ஏழை எளியோா்களுக்கு நலஉதவிகளையும் அவா் வழங்கினாா்.

விழாவில், அதிமுக மாநில இணைச் செயலா்கள் எஸ்.வீரம்மாள், ஆா்.வி.திருநாவுக்கரசு, பொருளாளா் ரவி பாண்டுரங்கன் உள்ளிட்ட நிா்வாகிகள் கட்சித் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments