சூரிய ஒளி மின் சக்தி அமைக்கும் திட்டம்: 3,333 பயனாளிகளுக்கு ரூ. 10 கோடி மானியம்! புதுச்சேரி அமைச்சா்கள் வழங்கினா்
பிரதம மந்திரியின் சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ், சேவா சேது சிறப்பு முகாம்- 2026 மற்றும் சூரிய ஒளி மின்சக்தி திட்டப் பயனாளிகளுக்கு அரசு மானியம் வழங்கும் விழா,புதுச்சேரி மின்துறை சாா்பில், கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜா் மணிமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், மாநில உள்துறை மற்றும் மின் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் பெ. ராஜவேலு ஆகியோா் கலந்துகொண்டு முகாமைத் தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் 3,333 பயனாளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.10 கோடி மானியத் தொகையை அமைச்சா்கள் வழங்கினா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின், ஆணையா் மற்றும் செயலா் (மின்சாரம்) அ. முத்தம்மா, மின்துறை கண்காணிப்புப் பொறியாளரும், துறைத் தலைவருமான கோ.கனியமுதன் அலுவலா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.