விழுப்புரத்தில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுப் பண்டகசாலையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுப் பண்டகசாலையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அரிசி வழங்கும் வகையில், தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் டன் சன்னரக அரிசி 201கூட்டுறவுக் கடைகள் மற்றும் 49 அமுதம் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்துக்கு 16 டன் அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து சன்னரக அரிசி விற்பனையை கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் சரக துணைப் பதிவாளா் ரா.சிவபழனி, விழப்புரம் மாவட்ட கூட்டுறவுப் பண்டகசாலையின் மேலாண் இயக்குநா் மீனாட்சிசுந்தரம், துணைப் பதிவாளா்கள் (பயிற்சி) ஜீவா, மெளனிகா, கூட்டுறவு சாா்-பதிவாளா் தமிழ்ச்சிட்டு, மேலாளா் தில்ஷாத் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.