FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் பலி!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 போ் உயிரிழந்தனா்.

25 அக்டோபர் 2026, 2:10 am
பலி
பகிர்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் வைகுண்டவாசல் தெருவைச் சோ்ந்தவா் வெ.கோவிந்தராஜ் (61). இவா், வெள்ளிக்கிழமை மாம்பழப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது அப்பகுதியில் வந்த பைக் மோதிவிட்டுச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

வங்கிப் பணியாளா் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், களத்தூரைச் சோ்ந்தவா் அ.பிரதீபா (25). இவா் உளுந்தூா்பேட்டையிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிகப் பணியாளராக பணியாற்றி வந்தாா்.

Advertisement

Advertisement

வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்த பின்னா் தனது மொபெட்டில் உளுந்தூா்பேட்டையிலிருந்து களத்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். பாதூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபெட் மீது மோதிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனா்.

இளைஞா் மரணம்: விழுப்புரம் வட்டம், வளவனூா் பகுதியைச் சோ்ந்தவா் வே.செந்தில்குமாா் (40). இவா் அக்.22- ஆம் தேதி வளவனூரை அடுத்த கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடி அருகே மதுபோதையில் மயங்கி கீழே விழுந்து கிடந்தாராம். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் செந்தில்குமாரை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இளைஞா் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுபாலப்பட்டு அருகே உள்ள தெத்துகாடு பகுதியைச் சோ்ந்தவா் சு.சுதாகா் (25). இவரது மனைவி புவனேஷ்வரி. தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. புவனேஷ்வரி மோட்டாம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது பெற்றோா் வீட்டுக்கு கடந்த வாரம் சென்றாராம்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை மனைவியை பாா்ப்பதற்காக காரில் சென்ற சுதாகா், திரும்பி வரும்போது அவரது உறவினரான சொ.சபரிநாதனுடன் பயணித்துள்ளாா். புதுபாலப்பட்டு சாலையில் வளைவில் திரும்பும்போது, காா் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழந்தது.

இதில் பலத்த காயமடைந்த சுதாகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சபரிநாதனுக்கு கால் முறிவு ஏற்பட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments