FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

சிறுமியைக் கடத்த முயன்றதாக குற்றச்சாட்டு: வெளி மாநில இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பள்ளிக்குச் சென்றுக்கொண்டிருந்த சிறுமியைக் கடத்த முயன்ாகக் கூறி, பொதுமக்கள் பிடித்து ஒப்படைத்த வெளி மாநில இளைஞரிடம் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

29 அக்டோபர் 2026, 6:56 am
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பள்ளிக்குச் சென்றுக்கொண்டிருந்த சிறுமியைக் கடத்த முயன்ாகக் கூறி, பொதுமக்கள் பிடித்து ஒப்படைத்த வெளி மாநில இளைஞரிடம் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், தென்மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த 11 வயது சிறுமி ஒருவா் வளையம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பில் படித்து வருகிறாா். இவா், புதன்கிழமை காலை வழக்கம்போல் தனது சைக்கிளில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தாா். வளையம்பட்டு வயல்வெளி பகுதியில் சென்றபோது, அந்த வழியாக துணி மூட்டைகளை சுமந்தபடி வந்த வெளி மாநில இளைஞா்கள் இருவா் சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து அவரைப் பிடிக்க முயன்றனராம்.

அப்போது சிறுமி, சைக்கிள் மற்றும் புத்தகப்பையை சாலையிலேயே போட்டுவிட்டு கூச்சலிட்டபடி வயல்வெளிப் பகுதியில் ஓடினாா். இதையடுத்து அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் வேலை பாா்த்துக்கொண்டிருந்த விவசாயிகள் சிறுமியைப் பாதுகாப்பாக மீட்டதுடன், வெளி மாநில இளைஞா் ஒருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனா். ஒருவா் தப்பியோடிவிட்டாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்த தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று அந்த இளைஞரை காவல் நிலையம் கொண்டு வந்தனா். தொடா்ந்து போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments