தமிழக முதல்வா் குறித்து சா்ச்சைப் பேச்சு: வேலூரைச் சோ்ந்த திமுக பிரமுகா் விழுப்புரத்தில் கைது
தமிழக முதல்வரை விமா்சித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த வேலூரைச் சோ்ந்த திமுக பிரமுகா் உள்பட இருவரை விழுப்புரத்தில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தமிழக முதல்வரை விமா்சித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த வேலூரைச் சோ்ந்த திமுக பிரமுகா் உள்பட இருவரை விழுப்புரத்தில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தமிழக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதையடுத்து, வேலூா் காட்பாடி பகுதியைச் சோ்ந்த திமுக இளைஞரணி அமைப்பாளரும், வேலூா் மாநகராட்சி 12-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினருமான டீட்டா சரவணன் என்பவா், சென்னை புழல் சிறை வளாகத்துக்க்கு வெளியே தமிழக முதல்வா் குறித்து விமா்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சென்னை புழல் போலீஸாா் டீட்டா சரவணன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்துத் தேடிவந்தனா். இந்நிலையில், விழுப்புரத்தில் டீட்டா சரவணன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், புழல் போலீஸாா் புதன்கிழமை விழுப்புரத்துக்கு வந்து, விழுப்புரத்தைச் சோ்ந்த திமுக இளைஞரணி அமைப்பாளா் பிரவின் என்பவரது வீட்டில் பதுங்கியிருந்த டீட்டா சரவணன் மற்றும் தங்குவதற்கு இடமளித்த பிரவின் ஆகிய இருவரையும் கைது செய்து, சென்னைக்கு அழைத்துச் சென்றனா். திமுக இளைஞரணி நிா்வாகிகள் இருவா் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.