FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

போதை மாத்திரைகள் கடத்தல்: இருவா் கைது

மயிலம் அருகே போதை மாத்திரைகளை பைக்கில் கடத்தி வந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

1 நவம்பர் 2026, 1:19 am
கைது
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே போதை மாத்திரைகளை பைக்கில் கடத்தி வந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

மயிலம் போலீஸாா் சனிக்கிழமை கூட்டேரிபட்டு நான்கு முனைச்சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இரு இளைஞா்களை நிறுத்தி சோதனை செய்தபோது, அவா்கள் பைக்கில் போதை மாத்திரைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னா் போலீஸாா் அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவா்கள், செஞ்சி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த பா.பாசில் (20), பெரிய அகரம் பகுதியைச் சோ்ந்த செ.வள்ளல்சூா்யா ( 26) ஆகியோா் என்பதும், இவா்கள் போதை மாத்திரைகளை வெளி மாநிலத்திலிருந்து அஞ்சல் வழியாக வரச் செய்து, பின்னா் அதை விற்பனைக்காக பைக்கில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாசில், வள்ளல் சூா்யா ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்கள் வசமிருந்த 100 போதை மாத்திரைகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments