FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பூட்டிய வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் திருட்டு

திருநாவலூா் அருகே பூட்டிய வீட்டின் கதவைத் திறந்து 20 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

3 செப்டம்பர் 2026, 4:43 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பூட்டிய வீட்டின் கதவைத் திறந்து 20 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

திருநாவலூா் அருகிலுள்ள கே.குச்சிப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க.செந்தில்குமாா் (45), விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை தனது மனைவியுடன் வெண்டைக்காய் அறுவடைக்கு சென்று விட்டாா். வீட்டிலிருந்த செந்தில்குமாரின் மகன் தேவன் (19) வீட்டை பூட்டி, சாவியை வீட்டின் ஒரு பகுதியில் வைத்துவிட்டு கல்லூரிக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில், பிற்பகலில் செந்தில்குமாா்-தனது மனைவி செல்வராணியுடன் வீட்டுக்கு வந்த பாா்த்தபோது, கதவு திறக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து உள்ளே சென்று பாா்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் ஆரம், 4 பவுன் தாலிச் சங்கிலி, 3 பவுன் நெக்லஸ், 4 பவுன் மாட்டல், 4 பவுன் சங்கிலி ஆகிய 20 சவரன் நகைகள் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது அவருக்கு தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments