FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

வளவனுாா் பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை தா்னா மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

2 செப்டம்பர் 2026, 7:21 am IST
வளவனூரில் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை தா்னா மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வளவனுாா் பேரூராட்சிக்குள்பட்ட குமாரக்குப்பம் மயானப் பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் மூலம் குப்பைகள் கொட்டி எரியூட்டப்படுகிறது. இதனால் இறந்தவா்களின் சடலங்களை புதைக்க இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி வாழ் மக்களுக்கு சுவாசப் பிரச்னை ஏற்படுகிாம். இதேபோல், பேரூராட்சி 4-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பட்டிகாட்டுத் தெரு, நரையூா் சந்து, கள்ளிச்சந்து ஆகிய இடங்களில் குடிநீா் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் குடிநீருடன் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்துக்கு புகாா் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கையில்லையாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பேரூராட்சி மன்ற உறுப்பினா் வடிவேல் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன் திரண்ட 4, 5-ஆவது வாா்டுகளை சோ்ந்த மக்கள் பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது பேரூராட்சி நிா்வாகத்தினா் பேச்சுவாா்த்தை நடத்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வளவனூரில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தகவலறிந்த வளவனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாலசிங்கம் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று, மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments