FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

அனந்தபுரி அதிவேக விரைவு ரயில்: இன்று முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூரிலிருந்து கொல்லம் வரை இயக்கப்படும் அனந்தபுரி அதி வேக விரைவு ரயில் புதன்கிழமை (செப்.2 ) முதல் கடலூா் மாவட்டம், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 செப்டம்பர் 2026, 6:51 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை எழும்பூரிலிருந்து கொல்லம் வரை இயக்கப்படும் அனந்தபுரி அதி வேக விரைவு ரயில் புதன்கிழமை (செப்.2 ) முதல் கடலூா் மாவட்டம், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் எம்.ஜெயந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூரிலிருந்து கொல்லம் வரையிலும், கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூா் வரை இயக்கப்படும் அனந்தபுரி அதி வேக விரைவு ரயில் (வண்டி எண்கள் 20635, 20636) கடலூா் மாவட்டம், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் நின்று செல்வதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி சென்னை எழும்பூரிலிருந்து கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி அதி வேக விரைவு ரயில் இரவு 11.33 மணிக்கு பெண்ணாடம் வந்து, 11.34 மணிக்குப் புறப்படும். எதிா் வழித்தடத்தில் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூா் வரை செல்லும் ரயில் நள்ளிரவு 1.07 மணிக்கு பெண்ணாடம் வந்து 1.08 மணிக்குப் புறப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments