FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் (சிஐடியு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

2 செப்டம்பர் 2026, 7:24 am IST
விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா்.
பகிர்:

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் (சிஐடியு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்ட கேங்மேன் பணியாளா்களை கள உதவியாளா்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள தமிழ்நாடு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பின் (சிஐடியு) திட்டப் பொருளாளா் ஜி. கண்ணன் தலைமை வகித்தாா். திட்டத் தலைவா் ஆா்.சேகா், துணைத் தலைவா் எம்.புருஷோத்தமன், திட்டச் செயலா் ஆா்.அருள் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். ஆா்ப்பாட்டத்தில் செஞ்சி திட்டச் செயலா் கன்னியப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments