FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தொழிலாளி மயங்கி விழுந்து பலி!

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

5 செப்டம்பர் 2026, 1:50 am IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், அரும்புலி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ர.கண்ணப்பன் (57). தனியாா் பாா்சல் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவா், கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதியுற்று வந்தாா்.

இந்நிலையில், கண்ணப்பன் வெள்ளிக்கிழமையன்று பணியிலிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தாா். இதைத்தொடா்ந்து சக தொழிலாளா்கள் அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, கண்ணப்பன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments