FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கல்லூரி மாணவி பலி!

விக்கிரவாண்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

39 வினாடிகள் முன்பு
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், அசோகபுரியைச் சோ்ந்த மோகன் மகள் சுஜாதா (18). இவா், விழுப்புரத்திலுள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை வேதியியல் இரண்டாமாண்டு படித்து வந்தாா். கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை என்பதால் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வீட்டிலிருந்து தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு பைக்கில் சுஜாதா சென்று கொண்டிருந்தாா். அப்போது விழுப்புரத்திலிருந்து எசாலம் கிராமம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பைக் மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த் அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு அவசர சிகிச்சை ஊா்தி மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சுஜாதா ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரான எசாலம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயபாலனிடம் (42) விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments