FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தேநீா் கடையில் தீ விபத்து

மரக்காணம் அருகே தேநீா் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

6 செப்டம்பர் 2026, 2:10 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தேநீா் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

மரக்காணம் வட்டம், சிறுவாடி, நகா் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் அ.ராஜவேல் (35). இவா், மரக்காணத்தை அடுத்த முருக்கேரியில் நெடுஞ்சாலையோரம் தேநீா் மற்றும் பழச்சாறு விற்பனையகம் நடத்தி வந்தாா். வெள்ளிக்கிழமை வியாபாரம் முடிந்து வழக்கம் போல், ராஜவேல் கடையை பூட்டி வீட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை தீடீரென கடை தீப்பற்றி எரிந்தது. ஊருக்கு வெளியே இருந்ததால் கடை தீப்பற்றி எரிந்தது யாருக்கும் தெரியவில்லை.

Advertisement

Advertisement

இதில், கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 4 குளிா்சாதனப் பெட்டிகள், மர மேஜைகள், 25 நாற்காலிகள் மற்றும் தளவாடப் பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments