மகன், மகளுடன் தாய் மாயம்: போலீஸாா் விசாரணை
விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த பெண் தனது மகன், மகள் ஆகியோருடன் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வானூா் வட்டம், கிளியனூா் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் பால்ராஜ் (35). இவரது மனைவி ரோஜா (25). இவா்களுக்குத் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சக்தி முருகன்(7) என்ற மகனும், ரித்திகா(5) என்ற மகளும் உள்ளனா்.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்திலுள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்த ரோஜா, சனிக்கிழமை இரவு தனது மகன் மகள் ஆகியோருடன் மாயமாகிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.