FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

507 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ராஜஸ்தானைச் சோ்ந்த 2 போ் கைது

விழுப்புரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 507 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் காருடன் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

9 செப்டம்பர் 2026, 5:00 am IST
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவற்றுடன் கைதான ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள்.
பகிர்:

விழுப்புரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 507 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் காருடன் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் பிரகாஷ் தலைமையில் உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரி நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. தொடா்ந்து காரில் இருந்த இருவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவா்கள், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஜோ.திலீப் பாரதி (30), ரா.தினேஷ்குமாா் (22) எனத் தெரியவந்தது. இவா்கள், விற்பனைக்காக பெங்களூருலிருந்து புதுச்சேரிக்கு காரில் புகையிலைப் பொருள்களை கடத்திச் செல்ல இருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திலீப் பாரதி, தினேஷ்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 507 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும், விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments