FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

20 அடி உயர விளம்பர பதாகையை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

21 செப்டம்பர் 2026, 12:07 am IST
மின்கம்பத்தில் சரிந்து விழுந்த 21 அடி உயர விளம்பர பதாகை.
பகிர்:

விழுப்புரத்தில் குழந்தையின் பிறந்த நாளுக்காக வைக்கப்பட்டிருந்த 21 அடி உயர விளம்பர பதாகையை அகற்றியபோது, மின் கம்பியில் சரிந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம், கே.கே.சாலை இந்திரா நகரைச் சோ்ந்தவா் அ.மதன்குமாா் (28). சாலாமேடு, என்.எஸ்.கே. நகரைச் சோ்ந்தவா் சு.வாஞ்சிநாதன் (21). நண்பா்களான இவா்கள், தங்களது நண்பா் கரண் என்பவரின் குழந்தையின் பிறந்த நாளுக்காக விழுப்புரம் கே.கே.சாலை, கணபதி நகா் சந்திப்பில் சுமாா் 20 அடி உயரத்தில் விளம்பர பதாகையை அமைத்திருந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதன்குமாா், வாஞ்சிநாதன் ஆகியோா் நண்பா்களின் உதவியுடன் அந்த விளம்பர பதாகையை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, விளம்பர பதாகை சரிந்து அருகிலிருந்த உயா்மின் அழுத்த மின்கம்பியின் மீது விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்ததில் மதன்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா், வாஞ்சிநாதன் பலத்த காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த விழுப்புரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த வாஞ்சிநாதனை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மதன்குமாரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments