FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நத்தம் அருகே வைக்கோல் லாரியில் தார்ப்பாய் அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

நத்தம் அருகே வைக்கோல் லாரியில் தார்ப்பாய் அகற்றியபோது மின்சாரம் பாய்ந்ததில் 15 வயது சிறுவன் பலியானது தொடர்பாக...

48 வினாடிகள் முன்பு
நத்தம் அருகே மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து தீப்பற்றி எரியும் வைக்கோல் லாரி தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீன்சாரம் பாயந்ததில் பலியான 15 வயது சிறுவன் - டிஎன்எஸ்
பகிர்:

நத்தம் அருகே வைக்கோல் லாரியில் தார்ப்பாய் அகற்றியபோது மின்சாரம் பாய்ந்ததில் 15 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள மார்க்கம்பட்டி எல்லைப்பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (23). லாரி ஓட்டுநரான இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ஈச்சர் லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு எல்லைப்பட்டிக்கு வந்தார்.

லாரியில் இருந்து வைக்கோலை கீழே இறக்குவதற்காக தார்ப்பாயை அகற்ற முயன்றபோது, அது சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து, தார்ப்பாயை எடுப்பதற்காக எல்லைப்பட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பெரியகருப்பன் லாரியின் மேல் ஏறியுள்ளார்.

அப்போது, லாரியின் அருகே சென்ற மின்சாரக் கம்பி அறுந்து சிறுவன் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் பெரியகருப்பன், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும், அறுந்து விழுந்த மின் வயரால் வைக்கோல் லாரியும் தீப்பற்றியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சாணார்பட்டி போலீஸார், சிறுவனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

Boy electrocuted to death while removing tarpaulin from hay truck near Natham

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments