அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாலையோரத்தில் பேருந்துக்காக காத்திருந்த இளைஞா் அரசுப் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாலையோரத்தில் பேருந்துக்காக காத்திருந்த இளைஞா் அரசுப் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், எண்ணூா், பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் எ.தாமோதரன் (32). சொந்த வேலை காரணமாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு வந்திருந்த இவா், புதன்கிழமை திண்டிவனம் வட்டம், ஓங்கூா் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காத்திருந்தாா்.
அப்போது, சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து தாமோதரன் மீது மோதியது. இதில், அவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், ஒலக்கூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.