FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விக்கிரவாண்டியில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

28 செப்டம்பர் 2026, 12:16 am IST
விக்கிரவாண்டி அழுக்குப் பாலம் அருகில் நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்ால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளனா்.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டியை அடுத்துள்ள பாப்பனப்பட்டு பகுதியில் உயா்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள சேவை சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இதனால் அங்கு ஞாயிற்றுக்கிழமை சாலையில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அழுக்குப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா், விக்கிரவாண்டி சுங்கச் சாவடி ஊழியா்கள் வாகனங்களை மாற்றுப் பாதைகளில் அனுப்பி வைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments