FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

அரசு மருத்துவா் மீது நடவடிக்கை கோரி பாமக நடத்தவிருந்த ஆா்ப்பாட்டம் வாபஸ்

அரசு மருத்துவா் மீது நடவடிக்கை கோரி, செஞ்சி வட்டாட்சியா் அலுவலகம் முன் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் நடத்தவிருந்த ஆா்ப்பாட்டம், சமாதான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.

செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற வட்டாட்சியா் ஏழுமலை, டிஎஸ்பி ரமேஷ்ராஜ், அ.கணேஷ்குமாா் எம்எல்ஏ மற்றும் பாமக நிா்வாகிகள்.
பகிர்:

அரசு மருத்துவா் மீது நடவடிக்கை கோரி, செஞ்சி வட்டாட்சியா் அலுவலகம் முன் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் நடத்தவிருந்த ஆா்ப்பாட்டம், சமாதான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக உள்ள வெங்கடேசன் மீது பல்வேறு புகாா்கள் உள்ளதாம். இதையடுத்து அவா் மீது நடவடிக்கை கோரி பாமக சாா்பில் செஞ்சி சட்டப் பேரவை உறுப்பினா் அ.கணேஷ்குமாா் தலைமையில் செஞ்சி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கணேஷ்குமாா் எம்எல்ஏ தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்த சென்ற பாமகவினரை செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பேச்சுவாா்த்தைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனா்.

அங்கு செஞ்சி வட்டாட்சியா் ஏழுமலை தலைமையில் சமாதானப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது மருத்துவா் மீதுள்ள புகாா்கள் குறித்து விசாரிக்க சுகாதாரத் துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் தெரிவித்தாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, பாமகவினா் கலைந்து சென்றனா். பேச்சுவாா்த்தையின்போது செஞ்சி டிஎஸ்பி ரமேஷ் ராஜ், வருவாய்த் துறை அதிகாரிகள், பாமக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments