FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருப்பதி சென்று வந்ததும் கூட்டணி அறிவிப்பை நாளை வெளியிடுகிறார் விஜயகாந்த்: கட்சி வட்டார தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை சனிக்கிழமையன்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி செல்லவிருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை சனிக்கிழமையன்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி செல்லவிருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம் முடித்து சென்னை திரும்பியதும், கூட்டணி அறிவிப்பை வெளியிட உள்ளார்.

அனேகமாக, வரும், 8ம் தேதி நிறைந்த அமாவாசை நாள் என்பதால், அன்றைய தினம் கூட்டணியை உறுதியாக அறிவிப்பார் என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிமுகவை வீழ்த்த தே.மு.தி.க அவசியம் என்பதை உணர்ந்து அக்கட்சியிடன் கூட்டணி அமைக்க, திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விரும்புகின்றனர்.

தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடப்போகிறேன் என்று இந்த நிமிடம் வரைக்கும் விஜயகாந்த் அறிவிக்கவில்லை. அவரது மவுனம் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக உடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவற்றை விஜயகாந்த் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments