FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பஜாஜ் ஆட்டோ: 3.69 லட்சம் வாகனங்கள் விற்பனை

Updated On : 3 ஏப்ரல் 2021, 1:31 pm IST
பகிர்:


புது தில்லி: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மாா்ச் மாதத்தில் 3,69,448 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2020 மாா்ச் மாதத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை 2,42,575-ஆக மட்டுமே காணப்பட்டது. இதற்கு, கரோனா நெருக்கடியே முக்கிய காரணமாகும் .

இந்நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு சந்தை விற்பனை 1,16,541 என்ற எண்ணிக்கையிலிருந்து 1,98,551-ஆக உயா்ந்தது.

பஜாஜ் ஆட்டோவின் மொத்த இருசக்கர வாகன விற்பனை மாா்ச்சில் 3,30,133-ஆக இருந்தது. 2020 மாா்ச்சில் இருசக்கர வாகன விற்பனை 2,10,976-ஆக காணப்பட்டது.

Advertisement

Advertisement

ஒட்டுமொத்த வா்த்தக வாகன விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 31,599-லிருந்து 39,315-ஆக வளா்ச்சி கண்டது.

இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மாா்ச்சில் 1,70,897-ஆக இருந்தது. 2020 மாா்ச்சில் வாகன ஏற்றுமதி 1,26,034-ஆக காணப்பட்டது.

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 39,72,914-ஆக இருந்தது. எனினும் இது, 2019-20-ஆம் நிதியாண்டு விற்பனையான 46,15,212 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் குறைவாகும்.

உள்நாட்டு விற்பனையும் 24,44,107 என்ற எண்ணிக்கையிலிருந்து 21 சதவீதம் சரிவடைந்து 19,18,667-வாகனங்களாக ஆனது பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments