FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஓப்போ ’கே 9 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

ஓப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஓப்போ ’கே 9 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர்-30 அன்று சீனாவில் அறிமுகமாகிறது.

Updated On : 27 செப்டம்பர் 2021, 1:23 pm IST
ஓப்போ ’கே 9 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்
பகிர்:

ஓப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஓப்போ ’கே 9 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர்-30 அன்று சீனாவில் அறிமுகமாகிறது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் ஓப்போ நிறுவனம் தன்னுடைய 'கே' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது. முன்னதாக கடந்த மாதம் ’ஏ16’ வெளியாகி வாடிக்கையாளர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது அதைவிட புதிய அம்சங்களுடன் 'கே 9 புரோ' அறிமுகமாக இருக்கிறது.

ஓப்போ கே 9 புரோ 5ஜி சிறப்பம்சங்கள் :

*6.43 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை 

*மீடியா டெக் டைமென்சிட்டி 1200 பிராசசர் 

*எண்டிஎஸ்சி கலர் 

* உள்ளக நினைவகம் 12ஜிபி + கூடுதல் நினைவகம் 256 ஜிபி 

* மெமரி கார்டு வசதி 

*பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (8எம்பி+2எம்பி ) , முன்பக்கம் 16 எம்பி செல்பி கேமரா 

*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

* ஆண்டிராய்ட் 11 (கலர் ஓஎஸ் 11.3) 

* சி-டைப் , வை பை 6, 

ஆரம்ப விலையாக இந்திய மதிப்பில் ரூ.25,000ஆக நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் அறிமுகப்படுத்தும் தேதி குறித்த தகவல் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments