டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.79 ஆக சரிவு
அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 79.03 என்ற அளவில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 79.03 என்ற அளவில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
டாலா் முதலீடு தொடா்ச்சியாக வெளியேறி வருவது மற்ரும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த சில வாரங்களாக ரூபாயின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் முடிவில் ரூபாய் மதிப்பு 78.85-ஆக இருந்தது. இது, வரலாறு காணாத குறைந்தபட்ச அளவாகும் என செலாவணி வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இன்று மேலும் 18 காசுகள் விழ்ச்சியடைந்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.79.03 ஆக வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.