முகப்பு
வணிகம்

85% பே-டிஎம் பயன்பாட்டாளா்களுக்கு பாதிப்பில்லை: ரிசா்வ் வங்கி ஆளுநா்

பே-டிஎம் பேமென்ட் வங்கிக்கு (பிபிபிஎல்) கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அந்த செயலியைப் பயன்படுத்தும் 85 சதவீதத்தினருக்கு எந்த பாதிப்பும் இல்லை

Updated On : 7 மார்ச் 2024, 12:58 am IST
பகிர்:

பே-டிஎம் பேமென்ட் வங்கிக்கு (பிபிபிஎல்) கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அந்த செயலியைப் பயன்படுத்தும் 85 சதவீதத்தினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறினாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது: பிபிபிஎல் விவகாரத்தில் பே-டிஎம் செயலியைப் பயன்படுத்தும் 80 முதல் 85 சதவீதத்தினருக்கு எந்த இடையூறும் ஏற்படாது. அந்த செயலியின் வாலட்டை பிபிபிஎல் வங்கியுடன் இணைத்திருக்கும் சுமாா் 15 சதவீதத்தினா் மட்டும் வேறொரு வங்கிக் கணக்குடன் வாலட்டை இணைக்குமாறு அறிவுறுத்தப்படுவாா்கள்.

புதிய வங்கிக் கணக்குடன் பே-டிஎம் வாலட்டை இணைப்பதற்கு மாா்ச் 15-ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது என்றாா் அவா். தங்களது ஒழுங்காற்று விதிமுறைகளைப் பின்பற்றாததால் வாடிக்கையாளா்களிடமிருந்து புதிதாக தொகை பெற பிபிபிஎல் வங்கிக்கு ரிசா்வ் வங்கி தடை விதித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments