உனக்காக என் காதல்
ஜெய்குமார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் "உனக்காக என் காதல்'. இதில் "நினைத்தாலே இனிக்கும்' படத்தில் நடித்த விஷ்ணு, புதுமுகம் ஷ்ரவன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். மும்பை மாடல் ஷ்ரதா
ஜெய்குமார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் "உனக்காக என் காதல்'. இதில் "நினைத்தாலே இனிக்கும்' படத்தில் நடித்த விஷ்ணு, புதுமுகம் ஷ்ரவன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். மும்பை மாடல் ஷ்ரதா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அஞ்சலிதேவி, டெல்லிகணேஷ், வையாபுரி, ஆர்.சுந்தர்ராஜன், ராஜலட்சுமி, முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குபவர் ஜெய்குமார். படப்பிடிப்பில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...
''இது, கல்லூரி பின்னணியில் நடைபெறும் ஒரு முக்கோணக் காதல் கதை. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறோம். காதல் உணர்வுகளுக்கும், இசைக்கும் முக்கியத்துவம் அளித்து படத்தை உருவாக்கி வருகிறோம். பாலிவுட் இசையமைப்பாளர் (நதீம்)- ஷ்ரவனின் மகன் சஞ்சீவ் தர்ஷன் இந்தப் படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்'' என்றவரிடம் "இந்திய அளவில் பேசப்பட்ட அந்த உண்மைச் சம்பவம் என்ன?'' என்று கேட்டால்...
Advertisement
Advertisement
''அதை இப்போது சொல்லமுடியாது. அது மிகவும் சென்சிட்டிவான விஷயம். மேலும், படம் வெளிவரும்போது அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து பொருளுதவியுடன் மரியாதை செய்யவுள்ளோம். இந்நிலையில் அந்தச் சம்பவம் பற்றி கூறினால் போலியான நபர்களுக்கு அது வாய்ப்பாகிவிடக் கூடும்'' என்கிறார்.
பாடல்கள் - பிறைசூடன். ஒளிப்பதிவு - உத்பல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.