உலக நாயகன் கமல் ஹாசனுக்கு இன்று 58வது பிறந்தாள்
திரை பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
உலக நாயகன் கமல் ஹாசன் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு இயக்குனர் கே. பாலசந்தர், நடிகர் பிரபுதேவா, நடிகை குஷ்பு உள்ளிட்ட திரை பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், 16 வயதினிலே, மூன்றாம் பிறை, இந்தியன், தசாவதாரம் என பல்வேறு வெற்றிப் படங்களை தந்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் விஸ்வரூபம் என்னும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை இவரே எழுதி இயக்கி தயாரித்து நடித்து வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.