வாய்மை எனப்படுவது யாதெனின்
சேவை மனப்பான்மையில் உள்ளோரும், சமூக சேவையில் ஈடுபட விரும்புவோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
வாய்மை எனப்படுவது யாதெனின்- பத்மஸ்ரீ எஸ். தாமோதரன் பக்.464; ரூ.400; இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு பதிப்பகம், திருவரங்கம், திருச்சி- 620 006. ✆ 99446 16123.
நீரின் அவசியத்தையும், கிராமங்களின் முக்கியத்துவங்களையும் உணர்த்தி ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகளை நாடு முழுவதும் அமைத்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையாற்றி பத்மஸ்ரீ விருது பெற்ற எஸ். தாமோதரன் எழுதிய இந்த நூல் சுய சரிதையாக மட்டுமல்லாமல், சமூக சேவையில் ஈடுபட விரும்புவோருக்கு ஒரு வழிகாட்டும் நூலாக உள்ளது.
சமூக சேவையில் ஈடுபட விரும்புவோருக்கு கொளக்குடிப்பட்டியில் உள்ள பயிற்சி மையம், தனது இளமைக் கால வாழ்க்கை, கல்வி நிலைய படிப்புகள், இளமையில் தோன்றிய ஞானம், திருமண வாழ்க்கை, நாடு முழுவதும் களப் பணியாற்றிய சமூகப் பணிகள், தன் வாழ்க்கையில் சந்தித்த ஏற்றத்தாழ்வுகள், துரோகங்கள், இழப்புகள், நல்ல நட்புகள், கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் பணிகள், உலகின் மற்ற தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு என்று தனது வாழ்க்கையில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் நூலாசிரியர் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார்.
Advertisement
Advertisement
சுயசரிதை என்றால் தன் புகழ் பாடுவது என்று இல்லாமல், தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள், தமிழகத்தின் முக்கிய சம்பவங்களையும் தொகுத்து காட்டியுள்ளார்.
தேசிய- மாநில அளவிலான பல்வேறு அரசியல் காலகட்ட நிகழ்வுகளும் இந்த நூலில் இடம்பெறுகின்றன. சுனாமி மீட்புப் பணியை பார்வையிட வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் நூலாசிரியரை அழைத்துப் பாராட்டியது, "கிராமாலயா' சேவை அமைப்பைப் பார்க்க வந்த ஹாலிவுட்
நடிகர் மேட் டேமன் போன்ற ருசிகர தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன.
சேவை மனப்பான்மையில் உள்ளோரும், சமூக சேவையில் ஈடுபட விரும்புவோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.