FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெள்ளி மருத்துவம்

53 பதிவுகளில் எளிய தமிழில், அனைவருக்கும் புரியும் விதத்தில் அறிவியலை எளிமைப்படுத்தி விளக்கி இருப்பது இந்நூலின் சிறப்பு.

பகிர்:

வெள்ளி மருத்துவம்- டாக்டர் எஸ். வத்சலா; பக். 112; ரூ. 120; விஜயா பதிப்பகம், கோவை- 641 001. ✆ 0422-2382614.

வெள்ளி இயற்கையிலேயே நோய்க் கிருமிகளை அழிக்கும் திறனுடையது. அதனால்தான் சாப்பிடும் தட்டு, குடிக்க உபயோகிக்கும் குவளை, பாலூட்டும் பாலாடை ஆகியவை வெள்ளியால் ஆனவையாக இருந்தன.

வெள்ளியில் எத்தனை நன்மைகள், வெள்ளி எப்படி மருந்தாகிறது என்பதை ரசாயனம் கற்ற இந்நூலாசிரியர் விவரிப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

Advertisement

Advertisement

நகைக் கடை, மருத்துவம், கருத்தடை சாதனம், முகம் பார்க்கும் கண்ணாடி, கண் சொட்டு மருந்து உள்ளிட்ட அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அனைத்துப் பொருள்களிலும் வெள்ளியின் பயன்பாடு நீக்கமற நிறைந்திருப்பதை ஒவ்வொரு பதிவும் வெளிப்படுத்துகின்றன.

எக்ஸ்-ரே ஃபிலிமில் கறுப்பாக இருப்பது வெள்ளி என்பதும், அந்த ஃபிலிம் மாசடைந்த நீரை சுத்திகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க பதிவு.

தீப்புண்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் ஏற்படும் புண்கள், முகப்பரு, பட்டாசு-வெடி விபத்தால் ஏற்படும் காயங்கள், ரசாயனப் பொருள்களால் ஏற்படும் காயங்களுக்கு வெள்ளிக் களிம்பு மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது என்பதை சுயபரிசோதனை செய்து நூலாசிரியர் நிரூபித்திருப்பதும், வெள்ளிக் களிம்பை தயாரிக்கும் முறையை மிக எளிமையாக விவரித்திருப்பதும் சாமானியர்களின் கைகளுக்கு எட்டும் மருத்துவம் ஆகும்.

செயற்கை மழை பெய்வித்தலில் வெள்ளி அயோடைடு முக்கியப் பங்காற்றுகிறது என்பதும், அதை சீனா, அரபு நாடுகள், அமெரிக்கா ஆகியவை என்னென்ன காரணங்களுக்காக பயன்படுத்தின என்ற தகவல் அதிர்ச்சியூட்டுகிறது. வெள்ளியின் பயன்பாட்டை எளிமையாக, சிறப்பாக, நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையில் வழிமுறைகளையும் விவரித்துள்ளது இந்நூல்.

53 பதிவுகளில் எளிய தமிழில், அனைவருக்கும் புரியும் விதத்தில் அறிவியலை எளிமைப்படுத்தி விளக்கி இருப்பது இந்நூலின் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments